'தர்பார்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க உள்ள 'தலைவர் 168 ' ஆவது படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 11 ஆம் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தின் முன் ஏற்பாடு பணிகள் மற்றும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே, இந்த படத்தில் காமெடி வேடத்தில் சூரியும், குணச்சித்திர வேடத்தில் பிரகாஷ் ராஜும் நடிக்க உள்ளதை படக்குழுவினர் உறுதி செய்தனர்.

அதே போல் நேற்றைய தினம், நடிகை கீர்த்தி சுரேஷ் 'தலைவர் 168 ' ஆவது படத்தில் தலைவருடன் நடிப்பது மகிழ்ச்சி என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்க உள்ளதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த 'குசேலன்' படத்தில் நடிகை மீனா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது, 168 ஆவது படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.