நடிகை மீனா திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு விலகினார். சமீப காலமாக, கம் பேக் கொடுக்க சிறந்த பட வாய்ப்பிற்காக காத்திருந்தார். தற்போது அவர் எதிர்பார்த்தது போலவே நடந்துள்ளது.

எஜமான், முத்து, போன்ற பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைத்து மீனா நடிக்க உள்ளதை படக்குழுவினர் உறுதி செய்தனர். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியானது. 

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிப்பது குறித்து வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ள மீனா, சன் புரோடக்ஷனில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தலைவர் 168 ஆவது படத்தில் நடிக்க உள்ளேன். ரொம்ப சந்தோஷமாகவும் எஸ்சைட்மெண்டாகவும் உள்ளது.

சன் நிறுவனத்தின் தயாரிப்பிலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிப்பது இது தான் எனக்கு முதல் முறை. ஆனால் ரஜினி சாரோட ரொம்ப நாளுக்கு அப்பறம், ரொம்ப வருடத்திற்கு அப்பறம் இந்த படத்தை நான் பண்ண போறேன். 

நல்ல கதை, நல்ல கேரக்ட்டர், நான் வரும் இடம் எல்லாம் ரொம்ப கலகலப்பாக இருக்கும் என தன்னுடைய கதாபாத்திரம் பற்றி, படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் முன்பே க்ளூ கொடுத்துள்ளார் நடிகை மீனா.

அந்த வீடியோ இதோ..