இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பெங்களூரைச் சேர்ந்த மனிஷா யாதவ், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஒரே பாடலில் தமிழகத்தை ஆட வைத்து பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது. ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

7 வருடம் காதலித்த நபரை பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் கரம் பிடித்த மனிஷா யாதவ். அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் பிரபலங்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் பிசியாக உள்ளனர். தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ள மனிஷா யாதவ், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

கொரோனா ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தனது காதல் கணவருக்கு முடி வெட்டி விடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அத்துடன் "இறுதியாக அவர் அந்த கேள்வியை கேட்டார்.. என் முடியை நீ வெட்டுவியா?... வெட்டிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். கட்டிங் செய்வதற்கு முன், பின் என மனிஷா யாதவ் வெளியிட்டுள்ள அவரது கணவரின் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.