உன்னைத்தேடி

சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,இந்தி என நிறைய மொழிகளில் நடித்துள்ளார். நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.

புகழ்

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.

வைரல்

அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது 38 வயதாகிறது.மாளவிகா நடிப்பதை நிறுத்தி முழுக்க முழுக்க குடும்பத்தலைவி ஆகி விட்டார்.இவருக்கு ஒரு மகனும் மகளும்  உள்ளனர்.மாளவிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.