ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க படுபவர்  ஜாக்கி சான். இவர்  நடித்து வரும் படம் 'குங்பூ யோகா'.  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை அமைரா  தஸ்தூர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்  ஜாக்கிசானுடன் இணைந்து நடித்தபோது  அவருக்கு  இந்தியில் கெட்ட வார்த்தை ஒன்றை கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

நமஸ்தே என்பதற்கு பதிலாக அவர் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தையை ஜாக்கிசான், நடிகர் சோனு சூட் அவர்களிடம் கூறியபோது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகவும் அமைரா   சமீபத்தில் கூறியுள்ளார்.

ஆனால் அது என்ன கெட்ட வார்த்தை என்பது மட்டும் அமைரா வெளியில் சொல்ல வில்லை....