actress lissy daugther commeted in tamil film
தென்னிந்திய சினிமாவில், பிரபல இயக்குனராக இருக்கும் பிரியாதர்ஷன் மற்றும் பிரபல நடிகை லிசியின் மகள் கல்யாணி தற்போது தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை லிசியும் இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்கிற மகளும், சித்தார்த் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 2014 ஆண்டு லிசியும் - பிரியதர்ஷனும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து, இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இவர்களுடைய மகள் கல்யாணி ஏற்கனவே தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா மகன் அகிலுக்கு ஜோடியாக 'ஹலோ' திரைப்படத்தில் அறிமுகமானார். இதைதொடர்ந்து நடிகர் சர்வானந்த் ஜோடியாகவும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தற்போது தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
