actress leka washington marriage
காதலர் தினம் படத்தில் துணை நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை லேகா வாஷிங்டன். அவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து 'உன்னாலே உன்னாலே' , 'வா கோட்டர் கட்டிங்', உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டும் இன்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கெளதம் கார்த்தி நடித்து வரும் 'ரங்கூன்' படத்தில் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறார்.

இவர் பல வருடங்களாக பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியை காதலித்து வந்ததோடு அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்த்து வந்தார். தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
இவர்களுடைய திருமணம் வருகிற 18ஆம் தேதி மும்பையில் உள்ள அலிபாக்கில், எளிய முறையில் நடைபெற உள்ளது. மேலும் லேகா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவர்கள் திருமணம் பொதுவான முறைப்படி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினமே அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாம். இதில் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
