எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த, அரசு அனுமதி கொடுத்துள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரிலீஸ் தேதி குறித்த ரகசியத்தை படக்குழு பொத்தி பொத்தி வைத்திருந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கு நடிகை அலிசான் டூடி, சட்டென போட்டுடைத்துள்ளார்.

'ஆர் ஆர் ஆர்' போன்ற பிரமாண்ட படங்களுக்கு, ரிலீஸ் தேதியை அறிவிப்பு குறித்த தகவலை படக்குழு, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் வெளியிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் நடித்து வரும் ஐரிஷ் நடிகை அலிசான் டூடி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 8 என்று குறிப்பிட்டிருந்தார்.

இது படக்குழுவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பதிவை அவர் நீக்கிய பிறகும், சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளம் சூடாகியுள்ளது.