திரையுலகம் ஷாக்..! ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான தேசிய விருது பெற்ற பிரபல நடிகை

பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Actress lalitha ICU

 

பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Actress lalitha ICU

தமிழ் சினிமா உலகமானது மொழி வேறுபாட்டை மறந்து திறமை இருப்பவர்களை எப்போதும் தன்னகத்தே வைத்துக் கொள்ளும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். கலைக்கு மொழி ஏது என்று கூறுவதும் இதன் அடிப்படையில் தான்.

மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் பரதனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கமலின் கலையுலகில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான தேவர் மகனை இயக்கியவர். மலையாளத்தில் பெரும் புகழ் பெற்ற இயக்குநர்.

இவரது மனைவி கேபிஏசி லலிதா. கேரள உலகில் ஆக சிறந்த குணச்சித்திர நடிகை. இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.

Actress lalitha ICU

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் மேடி மாதவனின் அம்மாவாக நடித்திருப்பார். மாதவன் அவரிடம் இருந்து நைசாக காசை வாங்கிக் கொண்டு ஷாலினியை பார்க்க செல்லும் தருணத்தில் கேபிஏசி லலிதாவின் முக பாவனைகள் சூப்பர் ரகம்.

மற்றொரு படம் காதலுக்கு மரியாதை… இதில் ஷாலினியின் அம்மாவாக… கிளைமேக்சில் எடுத்துக்கோங்க.. அவளை அவன்கிட்டே கொடுத்துடுங்க என்று பேசும் வசனங்களினால் ரசிகர்களினால் ஏகமாக பாராட்டப்பட்டவர்.

ஆர்யாவின் முதல் தமிழ் படமான உள்ளம் கேட்குமே படத்தில் அவரது அம்மாவாக நடித்து அசத்தி இருப்பார். ஏம்ப்பா இமான் அங்கே வந்தானப்பா? இன்னும் வீட்டுக்கு வரல்லியே என்று ஷாமிடம் பேசும் வசனமாக இருக்கட்டும், போடா போ பொண்ணு வந்திருக்கு… என்று அதே படத்தில் அறிமுக நடிகையான பூஜாவிடம் பேசும் வசனங்களாக இருக்கட்டும்… ரசிகர்கள் மனதில் நிஜ அம்மாவாகவே குடிபுகுந்து இருப்பார் கேபிஏசி லலிதா.

Actress lalitha ICU

அவருக்கு தற்போது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனையில் கல்லீரலில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. கேபிஏசி லலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள விவரம் அறிந்த மல்லுவுட் மட்டுமல்ல.. கோலிவுட்டும் கவலையில் இருக்கிறது.

5 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள கேபிஏசி லலிதாவின் உடல்நிலை பூரண குணம் அடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios