தமிழ் சினிமாவின் பிரபலங்கள் வரிசையாக யூடியூப் சானலில் ந்கழ்ச்சிகள் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிரபல நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் மிக விரைவில் ஒரு நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறார். குடும்பப்  பஞ்சாயத்துகளை நான் விட்டிவிடுவேன் என்று நினைத்தாயோ என மிரட்டும் வகையில் அந்நிகழ்ச்சிக்கு ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’என்று பெயர் சூட்டியிருக்கிறார் அவர்.

’பிரிவோம் சந்திப்போம்’,’எல்லாம் அவன் செயல்’,’பொய்சொல்லபோறோம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆரோகணம்,’நெர்ங்கி வா முத்தமிடாதே’,’அம்மணி’,’ஹவுஸ் ஓனர்’என்று வரிசையாக நான்கு படங்கள் இயக்கினார். ஆனால் அவர் பிரபலமாக முத்திரை பதித்தது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’நிகழ்ச்சியின் மூலம்தான். அடித்தட்டு மக்கள் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்கள் என்பது உட்பட ஏராளமான விமர்சனங்களை இந்நிகழ்ச்சி சந்தித்திருந்தாலும் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.

இந்நிலையில் அதே பாணியில் குடும்பப் பிரச்சினைகளை டீல் பண்ணும் நிகழ்ச்சி ஒன்றை யூடுயூப் வலதளத்தில் மிக விரைவில் துவங்கவிருப்பதாகவும் அந்நிகழ்ச்சிக்கு ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’என்று பெயர் சூட்டியிருப்பதாகவும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போலவே இதிலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். இந்த சொல்வதெல்லாம் உண்மை பார்ட் 2வில்இம்முறையாவது பெரிய இடத்து குடும்பப் பஞ்சாயத்துகள் சிலவற்றையும் டீல் பண்ணுவார் என்று நம்புவோம்.