நடிகர் சங்க பிரச்சனை:

கடந்த 2015 ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில், நாசர் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றனர். இந்த அணியில் செயலாளராக நடிகர் விஷால், பொறுப்பாளராக கார்த்தி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

நடிகர் சங்க கட்டிடம்:

தங்களுடைய ஆச்சு காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம் என கூறி, வெளிநாடுகளில் கலை விழா, நட்சத்திர கிரிக்கெட் போன்றவற்றை நடத்தி, அதில் வந்த பணத்தின் மூலம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டினர். இவர்களின் ஆச்சு காலம் முடிந்ததே தவிர நடிகர் சங்க கட்டிட பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.

ஆட்சிக்காலம் முடிவு:

நாசர் தலைமையிலான ஆச்சு காலம் முடித்தபின், ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நாசர் தலைமையில் விஷால் அணி களம் கண்டது. இவர்களை எதிர்த்து , பாக்யராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் குதித்தார்.

தள்ளுபடி:

பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றாலும், பாண்டவர் அணியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால், இந்த தேர்தலை தள்ளிப்படி செய்ததாக நீதிபதி அதிரடியாக கூறினார்.

நடிகர் சங்க நிலை:

இந்நிலையில் தற்போது நடிகர் சங்க பொறுப்பு தனி அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்க அறக்கட்டளையில் அவசர காலத்தில், நலிந்த கலைஞர்களுக்கு  வழங்க கூட பணம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

குட்டி பத்மினி வீடியோ:

இது ஒரு புறம் இருக்க நடிகை குட்டி பத்மினி மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வரும் நலிந்த கலைஞர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் கூட 25 லட்சமாவது தேவை படும்.

ஐசரி கணேஷ் 10 லட்சம் மற்றும் நடிகர் கார்த்தி 2 லட்சம் கொடுத்தனர். மற்றவர்கள் அவரவர் கையில் உள்ள 1000 , 2000 என தந்தனர். மேலும் சங்கீதா, உதயா போன்றோர் கொடுத்த பணத்தில் அரிசி போன்றவை வாங்கி கொடுத்தோம்.

எனவே, ரஜினி, விஜய், கமல், அஜித் போன்றவர்கள் தற்போது நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ: