1980 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சினி துறையிலும் சரி... தற்போது அரசியலிலும் சரி ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பூ. 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு எல்லாம் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு.

குஷ்பு நடித்து வெளியான சின்னத்தம்பி திரைப்படம் யாராலும் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பூ முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள குஷ்பூ பின்னர் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டு இது பெண் பிள்ளைகளை பெற்றோர் கடந்த 34 வருடங்களுக்கு மேலாக சென்னையில் வசித்து வரும் குஷ்பு அரசியலில் கால்பதித்தார்.

தொடக்கத்தில் திமுகவில் இருந்தாலும் பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார் அன்று முதல் இன்று வரை காங்கிரசில் தான் உள்ளார். ஆனாலும் பாஜகவில் இருப்பதற்கு அவருக்கு ஒரு ஆசை உண்டு என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. இருந்தபோதிலும் காங்கிரஸ் மேலிடம் அவரை விடுவதாக இல்லை என தகவல் பரவியது. குஷ்புவை பொருத்தவரையில் சமூக சிந்தனையாளர் என்று கூட கூறலாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தது, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காக குரல் கொடுப்பார்.

சின்னத்திரையில் மருமகள், ஜனனி, கல்கி, பாசமலர், நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் என பல சீரியலிலும் நடித்து வருகிறார் இதேபோன்று ரியாலிட்டி ஷோ வான கோடீஸ்வரி ஜாக்பாட் பூவா தலையா ஜூட் ரெடி அச்சம் தவிர் நம்ம வீட்டு மகாலட்சுமி நினைத்தாலே இனிக்கும் சிம்ப்ளி குஷ்பூ நிஜங்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் குஷ்பூ அப்படிப்பட்ட குஷ்புவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படம் ரசிகர்களாகிய உங்களுக்காக ...