நடிகை குஷ்பு திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை, இடைவிடாமல் நடித்து, ரசிகர்கள் மத்தியிலும், மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். 

நடிகை குஷ்பு திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை, இடைவிடாமல் நடித்து, ரசிகர்கள் மத்தியிலும், மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிப்பை தவிர்த்து அரசியல் பணிகளுக்கும் ஈடுபட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். மேலும் சின்னத்திரையில் சீரியல்களில் இவருக்கு தனி இடம் உண்டு. தற்போது கூட இவர் நடித்து வரும், 'லட்சுமி ஸ்டோர்' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

சீனியர் நடிகையாக ஆகிவிட்டாலும் எப்போது, மலர்ந்த முகம், துள்ளல் சிரிப்பு, சந்தன நிறம், என அழகு சிலை போல் இருக்கும் இவருக்கு தற்போது கூட பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், சினிமா நடிகைகளில் இவருக்கு மட்டுமே திருச்சியில் ஒரு ரசிகர் கோவில் காட்டியுள்ளார்.

இவருக்கு இந்த அழகு எப்படி வந்தது என்பது, தற்போது வெளியாகியுள்ள அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். குஷ்புவின் அம்மா, அப்படியே பார்ப்பதற்கு குஷ்பு போலவே இருக்கிறார். 

குஷ்பு தன்னுடைய தாயாருடன் பச்சை நிற புடவையில், சிம்பிள் மேக்ஆப்பிள் இருக்கும் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் தன்னிடம் இல்லை என்றும், இந்த புகைப்படத்தை மிகவும் நேசிப்பதாக கூறியுள்ளார். இதில் தேவதை போன்ற அழகில் உள்ளார் குஷ்பு. அந்த அறிய புகைப்படம் இதோ...

Scroll to load tweet…