'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், தோல் மருத்துவர் சேதுராமன். இவர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி திரையுலக பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் சேதுராமனின் மரணம் குறித்து அறிந்த பிரபல நடிகை குஷ்பு மிகவும் அதிர்ச்சியாகி மனம் உருகி ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்...  அவர் தான் என் தோல் மருத்துவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட எனக்கு போன் செய்து எல்லாம் நன்றாக உள்ளதா என கேட்டறிந்தார்.

எப்போதும் புன்னகையோடு, மென்மையாக பேசும் நல்ல மருத்துவர். அற்புதமான மனிதர். அவருடைய உலகமே அவருடைய மகளை சுற்றி தான் இயங்கியது. அவருடைய மனைவியும் உலகம் தெரியாத பெண் என்பது போல் மனதை உருக்கும் விதமாக ட்விட் செய்துள்ளார்.

மேலும் நடிகர் சேதுராமன், கடந்த ஓரிரு தினத்திற்கு முன் கூட... மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.