தமிழ் சினிமாவில், 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை குஷ்பு பல வருடங்களுக்கு முன்,  திரைப்படம் ஒன்றிற்காக எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில், வெள்ளை நிற தாமாரை போல் இருக்கும் நடிகை குஷ்புவை மூன்று நடிகர்கள் அலுங்காமல் - குலுங்காமல் கையில் ஏந்தி உள்ளனர். இவருக்கு பக்கத்திலேயும் அரைகுறை ஆடையுடன் சில நடிகர் மற்றும் நடிகைகள் நிற்கின்றனர்.


தமிழ் மட்டும் அல்லது பல மொழிகளில் நடித்துள்ள குஷ்பு இது, மற்ற மொழி படத்திற்காக எடுத்து கொண்ட புகைப்படம் என்பது தெரிந்தாலும், எந்த படத்திற்காக இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டார் என்பதை தெரிவிக்கவில்லை மாறாக, பல வருடங்களுக்கு முன் எடுத்து புகைப்படம் என்பதை மட்டுமே தெரிவித்து, இதில் நடித்த நடிகர் நடிகர், நடிகையின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சி- ஐ  திருமணம் செய்து கொண்டபின், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்காவிட்டலும், தொடர்ந்து குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கதாப்பாத்திரம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார்.


மேலும், வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் இவர், இயக்குனர் சுந்தர் சி இயக்கிய நந்தினி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து, தற்போது லட்சுமி ஸ்டார் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகி வரும் நடிகை குஷ்புவின் கலக்கல் புகைப்படம் இதோ..