உலக மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய், பயமுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தால், பிரபல தொழிலதிபரும், அரசியல் வாதியுமான கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் உயிரிழந்துள்ள சம்பவர், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதாகும் இவருடைய இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு என, பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும், நடிகையுமான குஷ்பு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் எப்போதுமே உங்களை புன்னகை மன்னன் என்று தான் அழைத்திருக்கிறோம்". அழகான புன்னகையுடன் இருக்கும் உங்களுடைய அணுகுமுறை, மற்றும் உங்கள் சட்டையில் பெருமையுடன் காங்கிரஸ் பேட்ச் அணிந்திருப்பீர்கள். ஒரு போதும், கடினமாக உழைக்க நீங்கள் அஞ்சியது இல்லை. பல ஏழைகளுக்கு தன்னலம் இன்றி உதவி செய்துளீர்கள் என வசந்தகுமார் எம்.பி.யின் நிலைவளைகளை கூர்ந்து தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதே போல் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய பதிவில் கூறியுள்ளதாவது,  வசந்தகுமார் எம்.பி மறைவு 
இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது. 
குமரியில் பிறந்து இமயம்வரை பரவிய
கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார்.

அவர் உழைப்புத் தேனீ; ஓயாக் கடல்; 
அடித்தட்டு மக்களின் அன்பர்.
பூமிக்கு வந்துபோன வசந்தமாய்ப் போய்விட்டார்.

அவர் புகழ் வாழ்க. என கூறியுள்ளார். இவர்களை தொடர்ந்து, பலர் தங்களுடைய இரங்கலை வசந்தகுமார் எம்.பிக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.