actress kushpoo admited in hospital

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பிரபல நடிகையுமான குஷ்பு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் கால் தவறிக் கிழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். மேலும் தொடர்ந்து இவருக்கு அடிக்கடி வயிறு வலியும் இருந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது வயிற்று வலி அதிகமாகி மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் தற்போது குஷ்பு பிரபல தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு வரும் 4 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குஷ்பு கலந்துகொள்ளவிருந்த முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.