கடந்த 2012 ஆம் ஆண்டு, நிர்பயா என்ற மாணவியை அக்ஷய் குமார், குமார் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங், ஆகிய  நான்கு பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசினர்.

இதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடந்த 7 வருடமாக நடைபெற்ற நடைபெற்று வந்த வழக்கில், நிர்பயா கொலை  வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நிர்பயாவின் தாய் ஆஷா thevi விடாப்பிடியாக தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் தூக்கில் இட வேண்டும் என நீதிமன்றத்தில் போராடி வந்த நிலையில், இன்று காலை 5:30 மணி அளவில் நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் அவர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு அவர்கள் இறப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், திகார் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஒரு தாயாக இந்த தண்டனையை வரவேற்று உள்ளதாகவும். ஆனால் இதற்கு 7 ஆண்டுகள் தேவைப்பட்டது ஏன் என்பது போலவும்  தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டால்  மட்டுமே, குற்றங்கள் குறையும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
.