பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமான குஷ்பு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிகவும் டல்லாகக் காணப்படும்  மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பு,...நாளை என்னை தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்,..நாளை முடிச்சுகள் அவிழும் நாடகக்காட்சிகளை நான் பார்க்க இயலாது.என் கெட்டகாலம். நாம் எதையாவது திட்டமிட..இயற்கை அதைத் தூக்கி எறிந்துவிடுகிறத். ரொம்பவும் அப்செட் மூடில் இருக்கிறேன்’என்று பதிவிட்டிருக்கிறார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் குஷ்பு மிகவும் அப்செட் ஆகியிருந்தார் என்றும் அதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி நேற்று இரவு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நார்மல் வார்டுக்கு வந்திருக்கிறார் என்றும் தகவல்.