நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடித்து வருகிறார்.பல ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் பவன் கல்யாண் அம்மாவாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

பெரியார்

இந்நிலையில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைகுரிய கருத்தை பதிவு செய்திருந்தார்.அதில் இன்று லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு பல அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

நிழல்

இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், எச்.ராஜாவை 'எச்சை ராஜா' என்று குறிப்பிட்டு, பெரியார் சிலை இடிப்பதாக இருந்தால் நீங்கள் வாருங்கள் நானும் அந்த இடத்திற்கு வருகிறேன் முடிந்தால் இடித்து பாருங்கள்.உங்களால் பெரியாரின் நிழலை கூட தொட முடியாது என்று பதிவிட்டுள்ளார்.