Asianet News TamilAsianet News Tamil

‘என் மதமா உன் மதமா?...நடிகை குஷ்பு - காயத்ரி ட்விட்டரில் கும்மாங்குத்து மோதல்...

‘என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிய முயற்சிக்க வேண்டாம். உங்கள் மத துவேஷத்தை மன்னிக்கவே முடியாது’ என்று காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் குஷ்புவுக்கு பா.ஜ.க. நடிகையும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

actress kushboo fights with gayathri jeyaram
Author
Chennai, First Published Jun 27, 2019, 12:16 PM IST

‘என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிய முயற்சிக்க வேண்டாம். உங்கள் மத துவேஷத்தை மன்னிக்கவே முடியாது’ என்று காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் குஷ்புவுக்கு பா.ஜ.க. நடிகையும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.actress kushboo fights with gayathri jeyaram

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது இளைஞர் திருடிவிட்டதாக ஒரு கும்பல் தாக்கியது. தாக்கியவர்களில் ஒருவர் அந்த இளைஞரை ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விஷயத்தில் அந்த இளைஞர் திருடர் என்பதையெல்லாம் மறந்துவிட்ட சமூக வலைத்தள போராளிகள், அவரை ஜெய்ஸ்ரீராம் என்று யாரோ ஒருவர் சொல்ல சொன்ன வீடியோ மட்டும் மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டனர்.

இதுகுறித்து நடிகை குஷ்புவும் ஆவேசமாக தனது ட்விட்டரில், இதுதான் புதிய இந்தியாவா? ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தி ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொன்றே விட்டது என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்த இளைஞர் ஒரு திருடர் என்பது குறித்தும் அவர் திருடியது குறித்தும் குஷ்பு எந்த பதிவும்  செய்யவில்லை. இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், 'இந்துக்கள் என்றாலே கொலைகாரர்கள் என்ற ரீதியில் சொல்வது தற்போது டிரெண்ட் ஆகிவிட்டது. மற்ற மதத்தினர் இதே தவறை செய்யும்போது குஷ்பு ஏன் வாயைத் திறப்பதில்லை? என்று பதிவிட்டிருந்தார். 

அதற்கு குஷ்பு, 'உங்களை போன்றவர்களிடம் நான் விவாதம் செய்ய தயாராக இல்லை. மறைந்த உங்கள் தந்தை, தாயார் மற்றும் உங்கள் உறவினர்கள் அனைவர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே ஷட்டப், வாயை பொத்தி கொண்டு இருக்கவும்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு மீண்டும் பதிலளித்த காயத்ரி, 'நீங்கள் என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்துள்ளீர்கள் என்பதற்காக என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க முடியாது. என் உலகம் பரந்து விரிந்த உலகம். மரியாதையாகப் பேச கற்று கொள்ளவும்' என்று கூறியதோடு, ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்திருப்பதாகக் கூறி நழுவ வேண்டாம். நான் உங்களுக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்றேன்.  ஓடி ஒளிய முயற்சிக்காமல் நான் கேட்கும் கேள்விக்குப் பதிலளியுங்கள். உங்கள் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த பகையும் இல்லை. நான் எனது உரிமைக்காக வாதிடுகிறேன்' என்றுஅதில் கூறியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios