பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில தினங்கள் பங்கேற்றதால் தனது ட்விட்டர் பதிவுகளுக்கு சற்றே ஓய்வு கொடுத்திருந்த நடிகை கஸ்தூரி திரும்பி வந்தவுடன் வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு நடிகை குஷ்புவிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அந்தப் பதிவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நல்லெண்ணத்துடன்,...மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார்.  இரு மதத்தையும் சம மனநிலையுடன் நடத்துகிறார். அன்பே கடவுள்... என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

ஆனால் கஸ்தூரியின் அந்தப் பதிவை நடிகை குஷ்பு ரசிக்கவில்லை. அதனால் அவரது பதிவை டேக் பண்ணிய குஷ்பு அவருக்குப் பதிலளிக்கும் விதத்தில்,..நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம், மும்பையில் பிறந்த இந்தியர் தமிழகத்தில் பிறந்த இன்னொரு இந்தியரை திருமணம் செய்தார்...அவர் சாதி மதம் கடந்து மனித மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனது உண்மையான இந்தியாவில் ஜாதி, மதம் என்று எதுவுமே குறுக்கே வருவதில்லை என்று சொல்லுங்கள் என கஸ்தூரிக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார். இதனால் கஸ்தூரிக்கு சரியான பாடம் புகட்டிவிட்டார் குஷ்பு என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.