’மோடிக்கு இருக்கும் விளம்பர வெறியால் அவர் இந்து மதக் கடவுள்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்துகிறார் பாருங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குமுறிக் கொந்தளித்திருக்கிறார் நடிகையும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான குஷ்பு.

நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ...இந்து மதத்திற்கு ஒரு அவமானம் நடந்தால் துள்ளிக்குதிக்கும் பக்தாஸ்களே இதோ பாருங்கள் மோடி சாமி கும்பிடும் படத்தைத் துல்லியமாக எடுப்பதற்காக சிவபெருமானின் அருகே நின்று போட்டோகிராஃபர் சுவாமியை அவமரியாதை செய்வதை.

எனக்கு இந்தப்படத்தைப் பார்க்கும்போது இன்னொரு சந்தேகமும் வருகிறது. மோடி உண்மையில் சாமி கும்பிடுகிறாரா அல்லது அந்த போட்டோகிராஃபருக்கு போஸ் கொடுக்கிறாரா? இதற்கு முன் லார்ட் சிவாவை வேறு யாராவது இந்த அளவுக்கு அவ மரியாதை செய்திருக்கிறார்களா? பற்றி எரியட்டும் இந்தியா...ஹே ராம்’ என்று பதிவிட்டிருக்கிறார் குஷ்பு.

குஷ்புவின் அந்தப் பதிவுக்குக் கீழ் அது ஃபோட்டோஷாப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல கண் டாக்டரைச் சந்திக்கவும் என்று பக்தாஸ் கதறி வருகிறார்கள்.