பிரபல தெலுங்கு நடிகை கிம்சர்மா மீது ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் திலீப் குமார் என்பவர் தன்னுடைய ஆடம்பர சொகுசு காரை அபகரித்து விட்டதாக மும்பை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். 

நடிகை கிம்சர்மா வீட்டில் தன்னுடைய காரை நிறுத்தி வைத்திருந்ததாகவும் அதை அவர் அபகரித்து பயன்படுத்தி வருவதாகவும் தன்னுடைய காரை அவரிடமிருந்து மீட்டு தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

முதலில் நடிகை கிம்சர்மாவின் கணவர் அலிபுஞ்சானி மீது கார் அபகரிப்பு புகாரை தெரிவித்திருந்த இவர் தற்போது அவருடைய பெயரை தவறாக கூறி விட்டதாகவும், கிம்சர்மாதான் தன்னுடைய காரை அபகரித்து வைத்து இருக்கிறார் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது கிம்சர்மா வெளியூரில் இருப்பதால் இவர் மும்பை திரும்பியதும் இவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.