பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த்துக்கு ஜோடியாக நடித்தவர், கியாரா அத்வானி. இதை தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண், ஆகியோருக்கு ஜோடியாகவும் நடித்துவிட்டார்.

மேலும் தற்போது, இந்தியில் உருவாகி வரும், அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாதிக் கபூர் ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ள நிலையில் இவருடைய மார்க்கெட் மற்றும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டியலும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழிலும், இவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பாப்போரை அதிர்ச்சியாகியுள்ளது.

இந்த வீடியோவில்... அவரே தன்முடியை கத்தரிக்கோலை எடுத்து வெட்டி கொள்கிறார். இந்த வீடியோவின் கீழ், நீண்ட முடி இருந்தால் பராமரிக்க முடிவதில்லை. இதற்கு ஒரே தீர்வு இது தான் என கூறி முடியை கட் செய்துகொண்டுள்ளார். இந்த வீடியோ தான் ரசிகர்களை அதிசியக்கியுள்ளது.