திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது. திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். அத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு குட்நியூஸையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் கடந்த 4 மாதங்களாக தனது டீம் உடன் இயற்கையான அழகு சாதன பொருட்களை உருவாக்க உழைத்து வந்ததாகவும், ரோஸ், சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பூமித்ரா அழகு சாதன பொருட்கள் அனைத்துமே கெமிக்கல் மற்றும் தேவையில்லாத வேஸ்ட் இல்லாத, சுத்தமான ஆர்கானிக் பொருட்கள் என்பதையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ... 

View post on Instagram