Asianet News TamilAsianet News Tamil

வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை ஏற்படலாம்; கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

ரகு தாத்தா இந்தி திணிப்பு தொடர்பான படம் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான படத்தை பற்றி பேச முடியும், தமிழக மக்கள் தான் இதை புரிந்துகொள்வார்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Actress Keerthy Suresh interviewed that there may be a desire to join politics in the future vel
Author
First Published Aug 11, 2024, 11:02 PM IST | Last Updated Aug 11, 2024, 11:02 PM IST

சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்  தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடத்துள்ள படமான ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ், மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். ரகு தாத்தா  படம்  அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம் ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே  பேமிலியோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

திருத்தணி அருகே கோர விபத்து; சம்பவ இத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த 5 மாணவர்கள்

பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருப்பதால் 1970 ஆம் காலகட்டத்தில் இருந்த பெண்களின் கதை பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்படுகிறது. அது இன்றும் நடைபெற்று வருகிறது. அதனை ஆங்காங்கே சிறு சிறிய வசனங்களாகவும், காட்சிகளாகவும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த படத்தை பார்க்கும் போது இதெல்லாம் பெண்கள் மீது  திணிக்க படக்கூடிய விஷயம் தானே என ஆங்காங்கே தெரியும்.

காலம் காலமாக வந்தால் கலாச்சாரம், திடிரென வந்தால் திணிப்பா என்ற டயலாக் இருக்கும், கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருப்போம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது அது காமெடியாக சொல்லியிருப்போம் இது முழுவதும் காமெடி படம் தான்

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு? இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை நடிப்பு மட்டும் தான். வருங்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பா? என்ற கேள்விக்கு? ஒருவேளை அரசியலில் வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன். அரசியல் ஆசை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என பதிலளித்தார்.

வேளாங்கண்ணி கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்கள்; கரை ஒதுங்கிய இரு உடல்கள்

இந்த படத்தில் ஹிந்தி திணிப்பை பேசுவதற்காக பெண்ணை ஹீரோயினாக காட்டியுள்ளோம் , பெண்களை  பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம் இதனை ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது. இன்றுவரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தி திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள் ,்இந்த படத்தில் இந்தியை திணிக்க கூடாது என்பதை தான் சொல்லி இருப்போம் படம் பார்த்தீர்கள் என்றால் புரியும். 

மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்றாலும் திணிப்பை பற்றி தான் பேசுகிறோம் திணிப்பை பற்றி தான் பேசினோம் மொழி மட்டுமல்ல எந்த விஷயத்தை திணித்தாலும் அது தப்பான விஷயம் தான் அதி நம்ம ஊரில் கனெக்ட் பண்ணும் விஷயம் தான் என்றார்.

சினிமாவில் பாதுகாப்பு நல்லாவே உள்ளது பிரச்சனை என்று வந்தால் எல்லா துறையிலும் வரலாம் சினிமா என்கிறது எல்லா விஷயங்களும் கேள்விப்படுவதால் விஷயங்கள் தெரிகிறது மற்ற துறைகளில் கேட்காததினால் அது குறித்து தெரிவதில்லை சினிமா என்பது பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்க விஷயம் கிடையாது என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios