நடிகை கீர்த்தி சுரேஷ், 'மகாநடி' படத்திற்கு பின் திரையுலகில் மற்றொரு தளத்திற்கு சென்று விட்டார்.  நயன்தாரா பாணியில் ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை மட்டுமே அதிகம் கேட்கிறார். அதே போல் பெரிய நடிகர்கள் படங்கள் என்றால், கதையை கேட்டு விட்டு ஓகே சொல்கிறார்.

மேலும், அம்மணியின் பார்வை இப்போது ஹிந்தியிலும் திரும்பி உள்ளதால், தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.

சமீபத்தில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க உள்ள 'தலைவர் 168 ' ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை அவரே ட்விட்டர் மூலம் கூறி, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருந்த, 'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கு முக்கிய காரணம், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க வேண்டும் என்றால், 8 மாதம் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆக கூடாது என்கிற அக்ரீமெண்ட் உள்ளதாம். பெரிய நடிகர்கள் படங்கள் அடுக்கடுக்காக வருவதால், இயக்குனருக்கான 8 மாதத்தை தியாகம் செய்ய முடியாது. ஹீரோக்கள் தான் முக்கியம் என கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறி இயக்குனருக்கு ஷாக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியை சும்மாவா.... சொன்னாங்க..