actress kausalya about her marriage
90 களில், இளைய தளபதி விஜய் உட்பட, பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌசல்யா. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இதுவரை தன்னுடைய நடிப்பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆபாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். 38 வயதாகும் இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையையில் இறங்கியுள்ளதாகவும் கடந்த வாரம், சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு தகவல் பரவியது. 
தற்போது இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள நடிகை கௌசல்யா... 'இப்போதைக்கு யாரையும் தான் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என்றும்' இப்படி பரவிய செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
