Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளுவர் இந்துவா இருந்தா என்ன தப்பு...? திடீரென பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி, திமுக முகத்தில் குத்துவிட்ட பிரபல நடிகை..!! அப்பப்பா என்னா ஆவேசம், என்னா ஆவேசம்..!!

 இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும்  கண்டனக் குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் வள்ளுவர் குறித்து எழுந்துள்ள  சர்ச்சைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கருத்து  பதிவிட்டுள்ளார்.  அதில்,   திருக்குறள் ஒரு மதநூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம்...  அதிலென்ன தவறு.?  வள்ளுவருக்கு காவி கூடாது என்பது உச்சகட்ட அரசியல் கூத்து...  துறவின் நிறம் காவி... அது வெறும் கட்சிக்கொடி அல்ல.  இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்து விட்டால் தமிழ் நாட்டின் எல்லாப்  பிரச்சனைகளுக்கும்  முடிவு கிடைத்துவிடுமா..?

actress kasthuri twit regarding thiruvalluvar  controversy and also ask question like why not thiruvalluvar maybe Hindu
Author
Chennai, First Published Nov 5, 2019, 2:19 PM IST

திருக்குறள் ஒரு மத நூல் அல்ல,  வள்ளுவர் இந்துவாக இருக்கலாம்... அதில் என்ன தவறு.?  இது உச்சக்கட்ட அரசியல்... என நடிகை கஸ்தூரி பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கருத்துக் கூறியுள்ளார். அரசுகளை கடுமையாக விமர்சித்து வந்த அவர் இவ்வாறு பேசியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

actress kasthuri twit regarding thiruvalluvar  controversy and also ask question like why not thiruvalluvar maybe Hindu

தாய்லாந்துக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி,  அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் "தாய்"  மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். அதைப் பாராட்டும் வகையில் தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து திருநீறு பூசப்பட்டு ருத்ராட்சம் மாலை அணிந்துள்ளதைப்போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இது  திமுக,  மதிமுக,  விடுதலை சிறுத்தைகள்,   கம்யூனிஸ்ட்,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமானவர் இல்லை , அவர் அனைவருக்கும் பொதுவானவர்.  பாஜக அவருக்கு காவி நிறம் பூசி மத அடையாளம் புகுத்த பார்க்கிறது என பாஜகவின் பதிவிற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

actress kasthuri twit regarding thiruvalluvar  controversy and also ask question like why not thiruvalluvar maybe Hindu

இச் சர்ச்சை இரண்டு நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில் , ஊடகங்களிலும் பெரும் விவாதமாக மாறிவருகிறது. அதே நேரத்தில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது  மை பூசி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.  இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும்  கண்டனக் குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் வள்ளுவர் குறித்து எழுந்துள்ள  சர்ச்சைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கருத்து  பதிவிட்டுள்ளார்.  அதில்,   திருக்குறள் ஒரு மதநூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம்...  அதிலென்ன தவறு.?  வள்ளுவருக்கு காவி கூடாது என்பது உச்சகட்ட அரசியல் கூத்து...  துறவின் நிறம் காவி... அது வெறும் கட்சிக்கொடி அல்ல.  இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்து விட்டால் தமிழ் நாட்டின் எல்லாப்  பிரச்சனைகளுக்கும்  முடிவு கிடைத்துவிடுமா..?  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios