ட்விட்டர் பக்கத்தில் வசிக்கத் தொடங்கி விட்ட நடிகை கஸ்தூரி அடிக்கடி அமளிதுமளியாக்குவதை வாடிக்கையாக்கி விட்டார். அவர் பதிவிடும் ட்விட்டுகளை பலர் கழுவிக் கழுவி ஊற்றினாலும் நிறுத்திக் கொள்வதாக இல்லை அவர். ரஜினி, அஜித், விஜய் என ரவுண்டி கட்டி ட்விட்டும் அவர் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிற்கிழுத்திருக்கிறார்.

 

கடந்தவாரம் அஜித் ரசிகர்கள் பற்றி ட்விட்டியதில், "செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் 'தல' பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா?" எனக் கூறியிருந்தார். இதற்குப் அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்வினையாற்றி விட்டு ஓய்ந்திருந்தனார். அதற்குள் அடுத்து விஜய் ரசிகர்களிடம் வீணாக வாயைக் கொடுத்து மாட்டியிருக்கிறார் கஸ்தூரி. சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

 

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் வசூலில் சாதனை படைத்து ஹிட் அடித்தது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைக் கூறிய நடிகர் விஜய், தங்க நாணயம் பரிசளித்து வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

அவர் அனைவருக்கும் கொடுத்த பரிசில் தங்க நாணயம் இருந்தது. இந்த சந்திப்பு குறித்து கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு as usual  இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா? ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் அலுக்கஸுல purchase பண்ணியிருக்காரே!’’ எனத் தெரிவித்துள்ளார். இந்தப்பதிவிற்கு வழக்கம்போல விஜய் ரசிகர்கள் வூடுகட்டி வார்த்தைகளால் கஸ்தூரியை வதைத்து வருகிறார்கள்.