Kasthuri : கே.எல்.ராகுலை உள்ளாடை விளம்பரத்தில் பார்த்ததும் கமெண்ட் செய்த கஸ்தூரி... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
Kasthuri : கே.எல்.ராகுல் நடித்த விளம்பரத்தை பார்த்து ஷாக் ஆன நடிகை கஸ்தூரி, அவரின் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அவர்களை விளம்பரங்களில் நடிக்க வைக்க பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அதன்படி தோனி, கோலி, ராகுல், பண்ட் என இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலானோர் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் குளிர் பானங்கல், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான ஆப், ஆடை போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளதை இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் எந்த கிரிக்கெட் வீரரும் நடித்திராத விளம்பரத்தில் கே.எல்.ராகுல் நடித்துள்ளார். அவர் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளதை பார்த்து அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் கே.எல்.ராகுல் நடித்த விளம்பரத்தை பார்த்து ஷாக் ஆன நடிகை கஸ்தூரி, அவரின் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்ற விளம்பரங்களில் மட்டுமே இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்த்துள்ளோம். சில வீரர்கள் ஆடை விளம்பரங்களிலும் நடித்துள்ளனர்.
ஆனால் கே.எல்.ராகுலை உள்ளாடை விளம்பரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த விளம்பரம் ஆண்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன்’ என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இசைப் பணிகளை முடிக்காமல் இழுத்தடிக்கும் அனிருத்... அதிருப்தியில் கமல் - திட்டமிட்டபடி ரிலீசாகுமா விக்ரம்?