"படுத்தே விட்டானய்யா Moment இது தான்".. உலக நாயகனை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி - எதற்காக தெரியுமா?

Actress Kasthuri Tweet : தமிழ் திரையுலகில் முன்னணி நாயகி வலம் வந்த கஸ்தூரி, தற்பொழுது பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை என்றாலும், தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார்.

Actress Kasthuri Slammed Ulaga Nayagan Kamal on his views about chennai floods ans

அடிக்கடி இவர் பொதுவெளியில் பேசும் கருத்துக்கள் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்பொழுது நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மாநகரம் புயல் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் தனது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றே கூறலாம். வெகு சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினர்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

தம்மாத்தூண்டு தாடியை எடுக்க மறுத்ததால்... மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய விக்ரம்..! 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் "மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி.. அரசை குறை கூறுவது அல்ல.." என்று கூறியிருந்தார். அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். 

மக்கள் நீதி மையம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் (டிசம்பர் 9ம் தேதி) என்று அவர் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அவருடைய அறிவிப்பை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள நடிகை கஸ்தூரி "இதுதான் படுத்தேவிட்டானையா மூவ்மெண்ட்" என்று கூறி கமலை விமர்சித்துள்ளார். 

"மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது என்று அவர்" கூறியுள்ளார். வெள்ள பாதிப்பிற்காக அரசை குறைகூறாமல், ஆளும் கட்சிக்கு சாதமாக அவர் பேசுகின்றார் கமல் என்று அவர் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios