கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பொது மக்களையும் , பெண்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகை கஸ்தூரி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
கஜாபுயல்தாக்கியதில்கடும் சேதம் ஏற்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல்உள்ளிட்டமாவட்டங்களுக்கு நடிகை கஸ்தூரி 12 லட்சம் ரூபாய் மதிப்பிள்ள நிவாரணப் பொருட்களை கடந்த வாரம் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், நிறையபேர்கோடிக்கணக்கில்உதவிஉள்ளனர். நான்கொஞ்சநாளாகசம்பாதிக்காமல்இருந்தேன். என்னிடம்பணம்இல்லாவிட்டாலும்மனம்இருக்கிறது. பன்னிரெண்டுலட்சம்ரூபாய்க்குநிவாரணம்அனுப்பிஇருக்கிறோம். அங்குஉடனடித்தேவைதண்ணீர்தான். சாதாரணதண்ணீரைகுடிநீராகஆக்கக்கூடியகருவிகளைஅனுப்பிவைக்கிறோம்.
1000 போர்வைகள்மற்றும்கொசுமருந்துஉள்ளிட்டவைகளைஅனுப்புகிறோம். நானும்அங்குசெல்கிறேன். நம்முடையசகோதரர்கள்அங்குஇருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டைக்குச் சென்ற நடிகை கஸ்தூரி, அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தான் கொண்டு வந்திருந்த நிவாரணப் பொருட்களை அங்கிருந்த பொது மக்கள் மற்றும் பெண்களுக்க வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று கஸ்தூரி பார்வையிட்டார்.
கஸ்தூரியின் இந்த செயலுக்கு டெல்டா மாவட்ட பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
