பிக்பாஸ் சீஸன் 3’ நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்கிறார் என்று கஸ்தூரியே பலமுறை வதந்தி கிளப்பியும் ஏனோ நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்படவில்லை. ஆனாலும் விஜய் டி.வியினர் தன்னை அழைத்ததாகவும் சில காரணங்களால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று குட்டிக்கதை விட்டிருக்கிறார் அவர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த பல ஓவியங்களில் ஒன்று மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவினுடையதைப்போல் இருக்கிறது என்று ஒரு பொதுவான கருத்து நிலவிக்கொண்டிருக்க, பெரும்பாலும் ரிடையர்டு ஆசாமிகளே மெம்பர்களாக உள்ள கஸ்தூரியின் ஆர்மியோ ‘அக்கா அச்சு அசலா உங்க படத்தை வரைஞ்சு வச்சிருக்காங்க’ என்று உசுப்பேத்தி விட்டது. அதை உண்மை என்று நம்பிய கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,..அட, ஓவியமாவே  வரைஞ்சுட்டாங்களா?  😀
எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க  வாக்கு பலிச்சிருச்சே ! #BiggBossTamil3 என்று ட்விட் பண்ணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு ஆல் த பெஸ்ட்’ம் சொல்லியிருந்தார்.

அடுத்தும் விடாமல் அக்காவை உசுப்பேத்த விரும்பிய ஆர்மி மெம்பர் ஒருவர்,...Replying to @KasthuriShankar
இருந்தாலும் நீங்க போய் இருந்தீங்கன்னா செமையா இருந்திருக்கும்,விஜய் டிவி அழைத்தும் நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காதததற்கு காரணம் என்ன?!’ என்று கேட்க அதற்கு பதிலளித்த கஸ்தூரி,...ரெண்டு குட்டி காரணங்கள்- 
ஒரு குட்டிக்கு 12 வயசு, இன்னொரு குட்டிக்கு 7 வயசு !’என்று பதிலளித்திருக்கிறார்.