கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4-ல் இத்தனை ஹீரோயின்களா?....சோசியல் மீடியா குயின்களுக்கு தூண்டில் போடும் தொலைக்காட்சி...!

இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவிற்கு கூட வழியில் இல்லாமல் கஷ்டப்பட்டும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சி கோரிக்கை விடுத்திருந்தது. 

இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித் ஆகியோரும் நடிகைகள் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால் ஆகியோரும் லட்சங்களை வாரிக்கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் தாணு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கிலோ கணக்கில் அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கினர். 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

இந்நிலையில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் பெப்சிக்கு நிதி உதவி அளித்துள்ளார். பெப்சிக்கு ரூ. 5 லட்சமும், தன்னுடன் தலைவி படத்தில் பணியாற்றிய தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும் நிதி உதவி வழங்கியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் தானாக முன்வந்து பெப்சி அமைப்பிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.