’இந்தியன் 2’படத்தில் பிரியா பவானி சங்கரும், ஐஸ்வர்யா ராஜேஸும் அதிகாரபூர்வமாக கமிட் பண்ணப்பட்டதால் ஏற்கனவே கமிட் பண்ணப்பட்ட காஜல் அகர்வாலின் கதி என்ன என்ற கேள்விகள் தொடர்ச்சியாக நடமாடி வந்த நிலையில் தானும் அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.

காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. அப்படம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காஜல் அகர்வால்,’சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க தான் காத்திருக்கிறேன். நமது நாட்டிலும் அதுபோன்ற படங்கள் விரைவில் தயாராகும் என்ற நம்பிக்கை உள்ளது. ’பாரிஸ் பாரிஸ்’ படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படம் எனது சினிமா வாழ்க்கையிலேயே மிகுந்த திருப்தி அளித்த படம். தொடர்ந்து இதுபோன்ற வலிமையான கருத்தும் கதையும் உடைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.

இன்னொரு பக்கம் வேறு இரு நாயகிகள் கமிட் ஆனதால் கமல்,ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’படத்திலிருந்து நான் வெளியேறிவிட்டதாக செய்திகள் பரப்பபடுகின்றன. அப்படத்திலிருந்து நான் வெளியேறவில்லை. வாழ்வின் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறேன். எனது கதாபாத்திரம் என்ன என்பது  பற்றி பேச ஆசை தான். ஆனால் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளார். ஆனால் என்னுடையது கதாபாத்திரமாக ஆச்சர்யமான இருக்கும். நவம்பரில் என் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக களரிச்சண்டையும் குதிரையேற்றமும் கற்று வருகிறேன்’என்று தனது இருப்பை உறுதி செய்கிறார் காஜல் அகர்வால்.