திரையுலகை பொறுத்தவரை, கதாநாயகியாக அறிமுகமாகும் அனைவராலும் நிலைத்திருக்க முடிவதில்லை. முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், கிடைத்த வெற்றியை நடிகைகள் தக்க வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதல் பாடத்தில், வெற்றிக்கனியை  ருசித்த பல நாயகிகள் இரண்டு வருடம் கூட தாக்கு பிடிக்க முடியாமல், சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சியை கட்டிய பல கதைகளும் உண்டு.

ஆனால், ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் பின் சிறந்த நடிகை என நிரூபித்து, தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் ஒரு சில தமிழ் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

அஜித் , விஜய், கார்த்தி, சூர்யா, என இந்த ஜெனெரேஷன் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர், தற்போது சீனியர் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து வருகிறார். இந்தியன் 2 படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், அடுத்ததாக நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

தொடர்ந்து சீனியர் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து வருவதால், இளம் நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதும் குறைந்து விட்டதாம். இதனால் தான் அம்மணி கொஞ்சம் நஞ்சம் பட வாய்ப்பு இருக்கும்போதே, கெத்தா... ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறாராம். மேலும் காஜலுக்கு பெற்றோரும் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டை நடத்தி வருகிறார்களாம். 

வருடத்திற்கு... பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வந்த காஜலுக்கு இப்போது அதிக பட வாய்ப்பும் இல்லாமல், சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையா என வருத்தப்பட்டு போகின்றனர், காஜலின் ரசிகர்கள்.