பிறர் அறியாமல் உதவி செய்வதில் அஜித்தையும், விஜயகாந்தையும் புகழ்ந்து வருகிறது வருகிறார்கள் அவர்களை அறிந்தவர்கள். அதையே காற்றின் மொழியில் ஜோதிகா வழிமொழிந்திருப்பது அவர்கள் இருவரும் உதவி செய்வதிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.  

நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, 'ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்தும், அஜிதும் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். அவர்கள் செய்யும் உதவிகள் பலருக்கும் தெரியாது. இருவரும் அதை விளம்பரம் செய்யவோ குறைந்தபட்சம் அதுகுறித்து பேசுவதை கூட விரும்புவதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். அவரது கணவர் சூர்யா தனது அகரம் ட்ரஸ்ட் மூலம் ஏழை மாணவ- மாணவிகள் பல்லாயிரக் கணக்கானோருக்கு கல்வி அளித்து வருகிறார்.

கஜா புயல், கேரள வெள்ளம் உள்ளிட்ட எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலாக பல லட்ச ரூபாயை அள்ளிக் கொடுத்து வருகிறார் சூர்யா. இந்த நிலையில் உதவுவது பற்றி அவரது கணவர் சூர்யாவை குறிப்பிடாமல் அஜீத்தையும், விஜயகாந்தையும் குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  

முன்னதாக காற்றின் மொழி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் சகஜமாக நடித்துவிட முடியாது., ஆனால் அஜித்துடன் சகஜமாக நடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். நடிகர் ஜோதிகா தொடர்ந்து அஜித்தை பாராட்டி வருவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.