லண்டன் நாட்டை சேர்ந்த ஹாலிவுட் பழம்பெரும் நடிகை ஜான் கொல்லிஸ் வீடு கடந்த மூன்று நாட்களுக்கு முன், தீயில் கருகி சாம்பலானது. இதனை விடியோவாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை.

ஜான் கொல்லிஸின் வீட்டில், திடீர் என கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தீ பற்றியுள்ளது. வீட்டில் மர பொருட்கள் அழகிற்காக அதிகம் வைக்கப்பட்டிருந்ததால், தீ மள மளவென பரவியது.

உடனடியாக சுதாரித்து கொண்ட அவரும், அவருடைய கணவரும் தீயில் இருந்து தப்பியதோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஜான் கொல்லிஸுக்கு அதிக புகை மூட்டத்தால் திடீர் மூச்சி திணறலும் ஏற்பட்டது, உடனடியாக அவருடைய கணவர் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

தற்போது நலமுடன் இருக்கும் ஜான் கொல்லிஸ், தீயில் கருகி சாம்பலான, தன்னுடைய வீட்டை விடியோவாக எடுத்து, வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.