நடிகை ஜெயசித்திரா கடந்த 13 ஆண்டுகளாக தன்னுடைய ரங்கராஜ புறம் வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் என்பவர் வாடகை கொடுக்காமல் இருந்து வருவதாகவும், இது குறித்து வெளியில் வேறு விதமாக தகவல் கசிந்து வருவதால் விளக்கம் அளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய இவர்...

கடந்த வெள்ளிக்கிழமை திரைப்பட பைனான்சியர் அசோக் லோலா, எலிபேட் கேட் காவல் நிலையத்தில் இளமுருகன் மற்றும் மீனா இளமுருகன் என்கிற பெயரில் ஒரு FIR பதிவு செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், இளமுருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

இளமுருகன் ஒரு கார் புரோக்கராக இருந்ததாகவும், அவரிடம் பட பைனான்சியர் 7 லட்சம் மேல் கொடுத்து கார் வாங்கியுள்ளார். இதைதொடர்ந்து இவரிடம் இளமுருகன், குடும்ப உறவினர் திருமணத்திற்கு செல்ல இரண்டு நாட்கள் கார் வேண்டும் என எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் கார் வராததால், அசோக் லோலா போன் செய்துள்ளார். அப்போது இளமுருகன் கார் விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார். பின் காருக்கு உண்டான பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி செக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் பவுஸ் ஆகி 2 வருடம் ஆகிறது. இரண்டு வருடம் காத்திருந்து அது வீண் என தெரிந்த பிறகு தான் இவர் இது போன்ற புகார் கொடுத்துள்ளார் என விளக்கமாக கூறினார்.

இதைதொடர்ந்து பேசிய இவர், இது மட்டும் இன்றி நடிகர் விக்னேஷிடம் 6 லட்ச ரூபாய் கடன் பெற்று, 2 லட்சத்திற்கு செக் கொடுத்து அதுவும் பவுன்ஸ் ஆகி உள்ளது. 

மேலும் தனக்கு சொந்தமாக ரங்கராஜபுரத்தில் இருக்கும் வீட்டில் தான் இளமுருகன், மற்றும் அவருடைய மனைவி மீனா இளமுருகன் ஆகியோர் கடந்த 13 வருடங்களாக வாடகை கொடுக்காமல் தங்கியுள்ளனர் என்றும் அசோக் லோலா கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தன்னை மட்டும் இன்றி இன்னும் பலரை இளமுருகன் ஏமாற்றியுள்ளதாகவும். குறிப்பாக தன்னுடைய வீட்டில் 13 ஆண்டுகளாக இருந்துக்கொண்டு பொய் வழக்குகளை போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார். 

இதற்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் விதத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன், அவர் போட்ட வழக்கு பொய் என நிரூபனமானதால் கோர்ட் 60 நாட்களில் இளமுருகன் வீட்டை காலி செய்ய வேண்டும் என ஆர்டர் போட்டதாகவும். ஆனால் அவர் காலி செய்யவில்லை. 

பின்னர் போலீஸ் மற்றும் வக்கீலுடன் சென்ற போது அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தற்போது நீதி மன்றம் இன்னும் 20 நாட்கள் அவருக்கு கெடு கொடுத்துள்ளதாகவும் அவர் வீட்டை காலி செய்யாவில்லை என்றால் பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டை கைப்பற்றலாம் என உத்தரவு பிரப்பிதுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு 7 லட்சம் வரை வாடகை கொடுக்காமல் அவர் எமற்றியதையும் அதற்கான ஆதரங்களையும் செய்தியாளர்கள் முன்னிலையில் கட்டியுள்ளார்.