90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி, ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர். தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார்.தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை அவர் சம்பாதித்துள்ளார்.

தனது முதல் படமான தடக் திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே. ஆனால், ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார். 

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். சமீபத்தில் திருப்பதியில் உள்ள  3500 படிகள் கொண்ட அழிபுரி -திருப்பதி பயணத்தை மேற்கொண்டுள்ளார். அம்மா ஸ்ரீதேவி ஆண்டுதோறும் மேற்கொள்ளும் திருப்பதி பயணத்தை இந்த ஆண்டு, ஜான்வி கபூர் செய்து முடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ....