நீயா நானா ஷோவில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெரு நாய்கள் தொடர்பான விவாதம் குறித்து அது முற்றிலும் ஸ்கிரிப்ட் என்றும், எங்களை பேசவே விடவில்லை என்றும் யூடியூப் பிரபலம் நடிகை ஜனனி கூறியுள்ளார்.
நீயா நானா ஷோவில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெரு நாய்கள் தொடர்பான விவாதம் குறித்து அது முற்றிலும் ஸ்கிரிப்ட் என்றும், எங்களை பேசவே விடவில்லை என்றும் யூடியூப் பிரபலம் நடிகை ஜனனி கூறியுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை மையப்படுத்தி கார சாரமான விவாதம் நடைபெறும் அப்படி ஒரு விவாதம் தான் கடந்த 28ஆம் தேதி ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என்றும் தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற தலைப்பு இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் சினிமா பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டு பேசினர். சினிமா நடிகை அம்மு ராமச்சந்திரனும் கலந்து கொண்டு பேசினார். ஆனால், இந்நிகழ்ச்சிக்கு பிறகு தான் அதிகளவில் டிரோல் செய்யப்பட்டதாகவும், இந்நிகழ்ச்சியில் நாங்கள் பேசியது எதுவும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றும் கூறி தனது கருத்தை முன் வைத்தார். இது தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதே போன்று படவா கோபியும் தனது கருத்தை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் தான் இந்த ஷோ குறித்து மற்றொரு நடிகையும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வேறு யாருமில்லை அனைவருக்கும் பிடித்த யூடியூப் பிரபலம், எனக்கு 20 உனக்கு 23 வெப் சீரிஸ் நடிகை ஜனனி கருத்து தெரிவித்துள்ளார். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் ஜனனியும் கலந்து கொண்டிருந்தார். மேலும், தெய் நாய்களுக்கு ஆதரிப்பவர்கள் பக்கமாக அமர்ந்திருந்தார். ஆனால் அவர் பேசவில்லை. பேசுவதற்காக வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜனனி கூறியிருப்பதாவது: இந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். சும்மாவே இருந்தேன் பேசவே இல்லை என்றெல்லாம் மீம்ஸ் போட்டு இருந்தீங்க. ஷோ ஆரம்பித்து 10 நிமிடத்திலேயே எங்களுக்கு தெரிந்துவிட்டது. இது முழுக்க முழுக்க டி ஆர்பிக்காக ஸ்கிரிப்டேடாக எடுத்த ஷோ என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. இதில் நான் பேசி மட்டும் என்ன ஆகப்போகிறது. 8 மணி நேரம் எடுக்கப்பட்ட இந்த ஷோவில் 45 நிமிடங்களாக எடிட் செய்து போட்டுருக்காங்க.
அதுமட்டும் இல்லாமல் நாங்கள் கொடுத்த முக்கியமான தகவல்களை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதில் கோபிநாத்தை சொல்லியும் தவறு இல்லை. அவரே டாக் பேக் கேட்டு தான் பேசிக் கொண்டிருக்கிறார். தெரு நாய்களுக்கு எதிராக பேசியவர்களின் கருத்துக்களை மட்டுமே தெளிவாக காட்டியிருந்தார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற ஒரு விவாத நிகழ்ச்சியை லைவாக காட்டினால் மக்கள் நேரடியாக பார்ப்பார்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
