actress interest to dating for dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் பல்வேறு கோப்பைகளை இந்திய அணிக்கு வாங்கிக் கொடுத்து நாட்டுக்குப் பெருமை சேர்ந்தவர்களில் ஒருவர்.

கடந்த ஆண்டு இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். தோனியின் மனைவி சாக்‌ஷியாக கய்ரா அத்வானி நடித்திருந்தார்.

இந்நிலையில் கய்ரா அத்வானி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார், அதில் அவர் யாருடன் ஒரு நாள் டேட்டிங் போக விரும்புகிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘தோனி, அவர் மகள், மனைவியை நடத்தும் முறை தனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாலும் பரவாயில்லை, அவருடன் ஒரு நாள் டேட்டிங் செல்ல வேண்டும், அது தான் என் ஆசை’ என்று கூறியுள்ளார்.