படத்தில் எத்தனை நொடிகள் இடம்பெறப்போகிறதோ அல்லது சென்சாரின் கத்தரிக்குப் பலியாகப்போகிறதோ தெரியவில்லை, ஒரு லிப் டு லிப் முத்தக்காட்சியை ஒரு நாள் முழுக்க மீண்டும் மீண்டும் எடுத்துள்ளார் ஒரு இயக்குநர். அந்த லிப்லாக் காட்சியில் நடித்தவர் குடும்பப்பாங்கான நடிகை என்று பேரெடுத்த இந்துஜா என்றால் இன்னும் ஷாக் அடிக்கும்.

தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து ‘மேயாத மான்’ படம் மூலம் நடிகையானவர் இந்துஜா. அந்த படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் என்றாலும் ஹீரோ வைபவின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இந்துஜா. இன்னொரு பக்கம் சமீபத்தில் ரிலீஸாகி ஹிட்டடித்துள்ள ‘மகாமுனி’படத்தில் இந்துஜாவின் நடிப்பைப் பாராட்டி விமர்சகர்கள் ஏழெட்டுப் பாரா எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட முக்கியமாக  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்துஜா.ஆனால் பிகிலில் இந்துஜாவின் முத்தக்காட்சிக்கு இடமில்லை. முத்தக்காட்சி இடம்பெற்ரிருக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’. அந்த படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார் த்ருவா. இப்படத்தில்தான்  த்ருவாவுடன் சேர்ந்து லிப் டூ லிப் காட்சியில் நடித்துள்ளாராம் இந்துஜா. அந்த காட்சியை படமாக்க கிட்டத்தட்ட ஒரு நாளாகிவிட்டதாம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை படமாக்கும் இடத்தில் இருந்தார்களாம்.

முத்தக் காட்சி குறித்து பேட்டி அளித்த துருவா,’எங்கள்  கதையில் திருப்புமுனையே அந்த முத்தக் காட்சி தான். முத்தக் காட்சி வேண்டுமே என்று திணிக்கவில்லை. அந்த காட்சியை இயக்குநர் அழகாக படமாக்கியுள்ளார். முத்தக் காட்சி ஆபாசமாகவோ, முகம் சுளிக்கும் வகையிலோ இருக்காது.படத்தை பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். சூப்பர் டூப்பரில் ஆக்ஷன், நகைச்சுவை, த்ரில், காதல் என்று அனைத்தும் சரியான அளவில் இருக்கும். சூப்பர் டூப்பர் அனைவருக்கும் பிடிக்கும்.படத்தில் என் பெயர் சத்யா, ஒரு ஏமாற்று ஆசாமி. அப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடும்போது தான் இந்துஜாவை சந்திப்பேன். இந்துஜா ஒரு திறமையான நடிகை. சூப்பர் டூப்பரில் அவர் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் ஒரு குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்’ என்றார்.

‘மகாமுனி’போன்ற படங்களில் நடித்துவிட்டு இன்னொரு பக்கம் முத்தக்காட்சி குத்துப்பாட்டு என்று இறங்குகிறார் என்றால் இந்துஜா தமிழ் சினிமாவில் அடித்து ஆடத் துவங்கிவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.