1966-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 34 ஆண்டுகள் இந்திய திரை உலகில் பிரபலமாக நடித்தார்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். ஸ்ரீவித்யாவின் கடைசி காலத்தில் அவரை கேரள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் கவனித்து வந்தார்.

அவரது பாதுகாப்பில் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் உள்ளன. ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரம் சுப்பிரமணியபுரம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. தற்போது இதில் நடன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் வாடகை தொகை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறை வசூலித்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கித் தொகைக்காக அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்தது. 1250 சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவித்துள்ளது.

சிங்கத்திடம் கார் பரிசாக வாங்கிய நயன் பாய் பிரண்ட்!

சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது ஆனாலும் படம் எதிர்பார்த்த லாபத்தைத் தரவில்லை என விநியோகம் செய்தவர்கள் புலம்பித் தீர்த்தனர். இந்நிலையில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனதாக   இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஆனால் கோலிவுட் வட்டாரம் இந்த படம் என்ன வெற்றி படமா? என வினியொகிஸ்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பர்ஸ்ட் லுக் ரிலீஸ் டேட்டை கசியவிட்ட தளபதி டீம்?

தளபதி 62 பட ஆரம்பத்திலிருந்தே ஒரே கொண்டாட்டம் தான் காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒருபக்கம் அடுத்து ஏ.ஆர்.ரகுமான் அடுத்து அடுத்து கொடுத்த கொண்டாட்டம் இப்ப அடுத்த கொண்டாட்டம் படத்தின் முதல் பார்வை அதாவது பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாக போகும் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது தளபதி-62. இப்படமும் முருகதாஸின் முந்தைய படங்கள் போல் சமூக கருத்துக்களை பேசுமாம்.

இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிய, விரைவில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனால், விஜய் ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் தல!

மார்ச் 16 முதல் அனைத்து திரைப்பட துறை சார்ந்த படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் செய்தது தயாரிப்பாளர் சங்கம். இதற்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பட தயாரிப்பாளர். விஸ்வாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு விட்டன. படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டார்.

“தயாரிப்பாளர்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த முடிவில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு கூடாது, போராட்டத்தின் போது சில இழப்புகள் வரத்தான் செய்யும்” என பெரும்பான்மையான உறுப்பினர்கள் குரல் கொடுக்க தியாகராஜனும் சங்க முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளனர்.

இச்சம்பம் பற்றி அறிந்த தல, “அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல. சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமுல்படுத்த தீவிரமாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து விஸ்வாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டது தவறானது” என தியாகராஜனிடம் கடுப்பில் பேசினாராம் தல.