தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் சேர்ந்து மகா பட ஷூட்டிங்கை முடிந்தார். தற்போது லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள இந்த நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். இசை வாத்தியங்களை வாசிக்க கற்பது, சமையல், பெயிண்டிங், வீட்டு வேலை என தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து விதவிதமாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அப்படி தான் ஹன்சிகாவும் தன்னை பற்றி தனது ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தமாக ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கியுள்ளார். 

'Who is Hansika?' என குறிப்பிட்டு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. What keeps me going: A short memoir என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவரது சொந்த குரலிலேயே தன்னை பற்றி ஹன்சிகா பேசியுள்ளார். அதில், ஸ்டார், நடிகை... இல்லை நான் முதலில் ஒரு மனுஷி என்று தொடங்கும் அந்த வீடியோவில், எதையும் சிறப்பாக செய்ய விரும்புபவள், மகிழ்ச்சியான துடிப்பான பெண், ஷூட்டிங் செட்டில் இருப்பது அதிகம் பிடிக்கும், திரைப்பிரபலங்களைப் போல நடிகர்களைப் பிடிக்கும், நான் இந்த இடத்தில் இருக்க காரணம் அவர்கள் தான். விரும்பியதை மட்டுமே செய்யும் அதிக சுதந்திரம் கிடைத்துள்ளது என பல தகவல்களை அவரே கூறியுள்ளார்.