கைவசம் பட வாய்ப்புகள் இல்லை... ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹன்சிகா...!
பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் அதிரடி முடிவெடுத்த ஹன்சிகா, பிரபல பாலிவுட் இசை பாடகரான டோனி கக்கார் உருவாக்கியுள்ள இசை ஆல்பத்தில் நடனமாடியுள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி கொண்டு வரும் ஹன்சிகா மோத்வானியை, தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படுகிறார். சமீபத்தில் ஓவராக உடல் எடையைக் குறைத்து ஒல்லி பெல்லி லுக்கிற்கு மாறிய ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் மஹா. ஹன்சிகாவின் 50வது படமான இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹன்சிகாவின் முன்னாள் காதலாரான சிம்பு கெஸ்ட் ரோலில் பைலட்டாக நடித்துள்ளார். என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் ஹன்சிகாவின் கைவசம் தற்போது இந்த ஒரு படம் மட்டுமே உள்ளது.
பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் அதிரடி முடிவெடுத்த ஹன்சிகா, பிரபல பாலிவுட் இசை பாடகரான டோனி கக்கார் உருவாக்கியுள்ள இசை ஆல்பத்தில் நடனமாடியுள்ளார். பூட்டி ஷேக் என்ற இசை ஆல்பத்தில் நடனமாடியுள்ள ஹன்சிகா, டோனி கக்கார் போன்ற இசைக்கலைஞரின் ஆல்பத்தில் நானும் பங்குவகித்துள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.