தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த நடந்த விருது விழாவில்  'ராட்சசி' திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்த விருது விழாவில் ஜோதிகா பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. 

மேலும் செய்திகள்: பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமா உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீ திவ்யா! அதிரவைக்கு உண்மை!
 

எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார். 

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
 

இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் பிரபலங்கள் உட்பட ஜோதிகாவுக்கு எதிராக பொங்கி எழுந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், ஜோதிகாவை மேடையில் பேசும் போது Be Careful  என எச்சரித்துள்ளது மட்டும் இன்றி, அவர் மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது... ஜோதிகாவின் ரசிகர்களின் கணிப்பு முட்டாள்தனமானது. இது உங்களை காப்பாற்றவோ அல்லது சிக்கலில் சிக்கவைக்கவோ இல்லை. அவரது பேச்சில் உண்மை இல்லாமல் யாரும் பொய்யான தகவல்களை பரப்பவில்லை. அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். அதே போல் மேடையில் பேசும் போது எச்சரிக்கையாக பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.