மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை திவ்யா உன்னிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதை முன்னிட்டு வளையக்காப்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

நடிகை திவ்யா உன்னி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்த பின்,  ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே அர்ஜூன் மற்றும் மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் திவ்யா. தற்போது இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை செய்து அழகு பார்த்துள்ளார் திவ்யா உன்னியின் இரண்டாவது கணவர் அருண் குமார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் திவ்யாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திவ்யா உன்னி  தமிழில் 'வேதம்', 'பாளையத்தம்மன்', 'சபாஷ்', 'கண்ணன் வருவான்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.